×

சீர்காழியில் விதை பண்ணையில் அதிகாரி ஆய்வு

சீர்காழி, நவ.27: சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் விதைப்பண்ணை விவசாயி ரவீந்திரன் வயலில் அமைக்கப்பட்டுள்ள சம்பா பருவ விதை பண்ணையில், கோயம்புத்தூர் விதை சான்று துறை இயக்குனர் பொறுப்பு நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளிடம் உரிய காலத்தில் கலவன் எடுத்தல், வயல் ஆய்வு மேற்கொள்ளுதல் குறித்து அறிவுரை வழங்கினார். பின்னர் கொள்முதல் செய்யப்பட்டு துணை கிடங்கில் இருப்பில் உள்ள உளுந்து விதைகளை குவியல்கள் படி உள்ளதா? அளவுகள் சரியாக உள்ளதா? பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது விதைச்சான்று உதவி இயக்குனர் குப்புசாமி, விதை சான்று அலுவலர்கள் எழில் ராஜா, கனகம், சீர்காழி துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Tags : Inspection of Seed Farm ,Sirkazhi ,
× RELATED சீர்காழியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்