சீர்காழி அருகே நாங்கூர் மணிமாட கோயிலில் கார்த்திகை உற்சவம்

சீர்காழி, நவ.27:சீர்காழி அருகே நாங்கூர் மணிமாடக் கோயிலில் கார்த்திகை உற்சவம் நடைபெற்றது.சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ கோயில்களில் ஒன்றான மணிமாடக் கோயில் நாராயணப் பெருமாளுக்கு கார்த்திகை மாத உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் சேவை சாத்துமுறை திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.Tags : festival ,temple ,Nangoor Manimada ,Sirkazhi ,
× RELATED அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று துவக்கம்