×

கொள்ளிடத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

கொள்ளிடம், நவ.27: கொள்ளிடத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நேற்று அகப்பட்டது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஏழைமுத்து என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் மாலை ஒரு நல்ல பாம்பு புகுந்து சிமெண்ட் சீட்டால் போடப்பட்ட கூறையின் உள்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதை ஏழைமுத்து பார்த்து உடனே தகவல் கொடுத்ததின் பேரில் சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் வந்து வீட்டிற்குள் இருந்த நல்ல பாம்பை பிடிக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.

தொடர்ந்து நள்ளிரவு வரை முயற்சி செய்தார். திடீரென அந்த பாம்பு வெளியேறி ஓடிவிட்டது. முயற்சி செய்தும் பாம்பு ஓடிவிட்டதால் மீண்டும் சீர்காழிக்கு பாண்டியன் சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் வீட்டுகுள் நேற்று காலை மற்றொரு நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத ஏழைமுத்து மீண்டும் பாண்டியனுக்கு அழைப்பு விடுத்தார். உடனே வீட்டிற்குள் சென்ற பாம்பு பாண்டியன் நல்ல பாம்பை லாவகமாக குறைந்த நேரத்திலேயே உயிருடன் பிடித்து சீர்காழியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட பாம்பு 5 அடி நீளம் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்