மது கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை

தூத்துக்குடி, நவ.27: திருச்செந்தூர் அருகேயுள்ள தோப்பூரைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் ராமகிருஷ்ணன்(46). இவர் கடந்த 11-11-2014 அன்று தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார், ராமகிருஷ்ணன் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்ட 41 போலி மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி மாரீஸ்வரி விசாரித்து ராமகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories:

>