×

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரால் டெங்கு அபாயம் தடுக்க கோரி மக்கள் நீதி மய்யம் மனு

தூத்துக்குடி, நவ.27:தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதனை தடுக்க கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:  தூத்துக்குடி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் 49வது வார்டுக்குட்பட்ட சூசைநகர், தூத்துக்குடி 13வது வார்டு மற்றும் 14வது வார்டுக்குட்பட்ட தேவர் காலனி, இந்திரா நகர், குறிஞ்சிநகர் பகுதிகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாததால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தண்ணீர் வடிய முடியாத பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர் கேடுகள் ஏற்பட்டிருப்பதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி உள்ள மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. மின்தடையும் அடிக்கடி ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் தூக்கம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், சீரான மின் விநியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உடன் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ரத்தினராஜா, சிவகுமார், பிரபு, ஞானராஜன், மணிராஜ், பிரிட்டோ, ஆட்டோ சுப்பிரமணி, சந்தனம், தவப்புத்திரன், மாரிக்கண்ணன் உள்பட ஏராளமான மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு