தலைஞாயிறில் கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேதாரண்யம், நவ.27: வேதாரண்யம் தாலுகா பேரூராட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு உலக கழிவறைதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணி பேரூராட்சியில் துவங்கி கடைத்தெரு, சின்னகடைத்தெரு,பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வர்த்தகர்கள் பொதுமக்களிடம் கழிவறையின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி எழுத்தர்கள் அன்பு, குமார், வரித்தண்டலர் குழந்தைராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>