×

467 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளியணை ஏரி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

வேலாயுதம்பாளையம்: 467 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருர் வெள்ளியணை ஏரி ஆக்கிரமிப்பால் சுருங்குகிறது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி ஏரி, வெள்ளியணை ஏரி, ஜெகதாபி ஏரி மற்றும் பெரிய தாதம்பாளையம் ஆகிய 4 பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் வெள்ளியணை ஏரிக்கு குடகனாறு உபரி நீர் கொண்டு வரப்பட்டது.அதன்பின் கடந்த 2020ம் ஆண்டு மழைக்காலத்தில் வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறைவான அளவு தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த ஏரியானது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.அதன் பின் காங்கிரஸ் ஆட்சியில் இந்த ஏரியை சீரமைத்து ஏரி முழு கொள்ளளவை எட்டும் போது உபரி நீர் இரண்டு இடங்களில் மறுகால் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பட்டியில் உபரி நீராக செல்லும் நீரானது மேட்டுப்பட்டி , பச்சப்பட்டி, லட்சுமிபுரம், வெங்கடாபுரம், வெள்ளியணை, குமாரபாளையம், செல்லாண்டி பட்டி, திருமுடி கவுண்டனூர் மாணிக்கபுரம் வழியாகச் சென்று அதன் பின் உப்பிடமங்கலம் ஏாிக்கு செல்கிறது. இதேபோல் தெற்கு லட்சுமிபுரத்தில் உபரி நீர் லட்சுமிபுரம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாசனத்திற்கு சென்று மீண்டும் மேட்டுப்பட்டி உபரி நீர் வாய்க்காலில் வந்து கலக்கிறது. இந்த ஏரியை நம்பி நேரடியாக ஆயிரத்து 600 ஏக்கர் பாசனமும் மறைமுகமாக வெள்ளியணை முதல் அய்யர்மலை வரை உள்ள விவசாய நிலங்களில் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் குழாய்களில் நிலத்தடி நீர் உயர்வதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் நிலம் மறைமுக பாசனம் பெறுகிறது. இந்த ஏரி ஒருமுறை நிரம்பி வழிந்தால் 3 ஆண்டுகள் வரை அனைத்து பகுதிகளிலும் நீர்ப்பாசன வசதி பெருகும். ஆனால் இன்று இந்த ஏாியை பொதுப்பணித்துறை சார்பில் எந்த ஒரு பாதுகாப்பும் பராமரிப்பும் செய்வதில்லை. இதனால் ஏரியை சுற்றி இடம் வைத்துள்ளவர்கள் இடங்களை ஆக்கிரமித்து ஏரியின் அளவு குறைந்து வருகிறது.பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவிரி உபரி நீரை கால்வாய் அமைத்தோ அல்லது பம்பிங் முறையிலோ கொண்டுவந்து பாசன வசதியை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று ஏரியை காப்பாற்றினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாய திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வெள்ளியணை ஏரிக்கு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்….

The post 467 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளியணை ஏரி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Veliyani Lake ,Velayuthampalayam ,Karur Vellianai lake ,Vellianani ,Dinakaran ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்