முடிவைத்தானேந்தலில் நூலக வார விழா

தூத்துக்குடி, நவ.27: முடிவைத்தானேந்தல் அரசு உயர்நிலை பள்ளியில் நூலக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.முடிவைத்தானேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய நூலக வாரவிழா நடந்தது. இதன் நிறைவு நாளையொட்டி கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவர்களை உறுப்பினர்களாக இணைக்கும் முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் கிருஸ்டிஎப்சிபா தலைமை வகித்தார். இதில் மாணவ மாணவிகளை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா தொகையை மாவட்ட முன்னாள் படைவீரர் வாரியம் துணைத்தலைவர் கர்னல் சுந்தரம், நிர்வாகி ஜெயபால் பர்னாண்ேடா ஆகியோர் வழங்கினர்.  சான்றுதி ஆணையர் வக்கீல் சொர்ணலதா, ஜெயன்ட் குரூப் ஆப் நிர்வாகி மலர் பிரேம்  இணைந்து கிளை நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் செய்திருந்தார். முடிவைத்தானேந்தல் கிளை நூலகர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

Tags : library ,festival ,
× RELATED டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை...