×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் பெண்கள் உள்பட 150 பேர் கைது பிறந்தநாள் விழாவில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து 4 பேர் கைது

வேதாரண்யம், நவ.27: வேதாரண்யம் தாலுக்கா அண்டர் காட்டை சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (26). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீட்டுவாசலில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் அவரது 3 பேர் நண்பர்கள் ஏண்டா ரோட்டில் நிற்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு முனீஸ்வரன் நாங்கள் ஓரமாக தானே நிற்கிறோம். நீங்கள் ரோட்டில் போக வேண்டியது தானே என கேட்டபோது வாய்த் தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா முனீஸ்வரனை தான் கையில் வைத்திருந்த கத்தியால் இடது கையில் பல இடங்களில் காயப்படுத்தியதோடு, அவருடன் வந்த நபர்களும் முனீஸ்வரனை தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனராம். இதில் காயம்பட்ட முனீஸ்வரன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து சூர்யா (20), சக்திவேல் (21), அஜித்குமார் (20),வாசுதேவன் (20) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Tags : arrests ,birthday party ,
× RELATED கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை