தரங்கம்பாடி அருகே அஞ்சலகம் இடமாற்றம் செய்யப்படுமா?

தரங்கம்பாடி, நவ.27: தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அஞ்சலகர் வீட்டில் இயங்கும் அஞ்சலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்ட பின் திருவிளையாட்டம் கிராமத்தில் பெருமாள்கோவில் தெருவில் அப்போது அஞ்சலகராக பணியாற்றியவர் வீட்டிலேயே அஞ்சலகம் துவக்கப்பட்டது. அன்றிலிருந்து அங்கே அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அஞ்சலகத் துறை நவீனமாக்கப்பட்டு பொதுமக்கள் டெபாசிட், சேமிப்பு கணக்கு, வங்கி பணிகள், பல்வேறு அரசு திட்டங்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு அஞ்சலகத் துறையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவிளையாட்டம் அஞ்சலகத்தை விரிவுப்படுத்தி நவீனமாக்கி புதிய இடத்தில் அஞ்சலகத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலக துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


Tags : Tharangambadi ,
× RELATED சாத்தான்குளத்தில் அஞ்சலகம் மூடல்