நகராட்சி அதிகாரிகள் அதிரடி காலமுறை ஊதியம் வழங்க கோரி

நாகை, நவ.27: சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜூ, துணைத்தலைவர்கள் கலைச்செல்வன், புகழேந்தி, வளர்மதி, அருண்மொழி, இணைச் செயலாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், பாலாம்பாள், ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வமான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கான உணவு செலவின தொகையை ரூ.5ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசே சத்துணவு மையங்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். தகுதியுள்ள சத்துணவு சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பெண் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு 9 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் 90 பெண்கள் உட்பட 150 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories:

>