×

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக்கோரி கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ. 26:  விருதுநகர்  கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி மாவட்ட  செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில், அக்கட்சியினர் கருப்பு உடையில்  ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘சாதி பிரிவில் உள்ள  குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திர  குலந்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து  சாதி சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட  காலமாக வலியுறுத்தி வருகிறோம்.

திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் குழு அமைத்தனர். அக்குழுவின் கோரிக்கை இன்று வரை நிறைவேற்றாமல்  அதிமுக அரசும் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறதே தவிர, முடிவு  எட்டப்படவில்லை. அரசியல் கட்சிகள் மக்களின் கோரிக்கைளை தொடர்ந்து  புறக்கணித்து வருகிறது. தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் அரசாணை  வெளியிடும் வரை கருப்பு மேலாடை அணிந்து அறப்போராட்டம் நடத்த தமமுக  முடிவெடுத்தது. கடந்த 15 நாட்களாக கருப்பு உடையணிந்து வரும் நிலையில்,  கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு  அளித்தனர்.

Tags : Devendra ,release ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்