×

துவார் கிராமத்தில் கஜாபுயலால் விவசாயம் பாதித்தவர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

புதுக்கோட்டை, நவ.26: கந்தர்வகோட்டை தாலுகாவில் கஜாபுயல் தாக்கிய தூவார் கிராம விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமககள் குறை தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்தார். அப்போது கந்தர்வகோட்டை தாலுகா தூவார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தூவார் கிராமத்தில் கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலில் விவசாயம் பாதிக்கப்பட்டது. நாங்கள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து இருந்தோம். ஆனால் எங்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

திருமயம் தாலுகா துறையூர், கீரணிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கஜா புயலின்போது 80 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் எங்கள் பகுதியில் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பிற கிராமங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. எனவே மற்ற பகுதிகளுக்கு காப்பீடு வழங்கியதுபோல் எங்கள் பகுதிக்கு ரூ.21ஆயிரம் ஏக்கருக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

Tags : Gajapuyal ,village ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி