×

காரைக்குடியில் திறமை வேட்டை நிகழ்ச்சி

காரைக்குடி, நவ. 26: காரைக்குடியில் மாவட்ட கவனக்கலை மன்றத்தின் சார்பில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வண்ணம் திறமை வேட்டை என்ற தலைப்பில் விழா கொண்டாப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கவனக்கலை மன்ற செயலாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். கவனக்கலை மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் தங்கசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேச்சு, கவிதை, ஆடல், பாடல், நடனம், பலகுரல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. கவுரவத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், சீனிவாசன், கண்ணன், இணைச்செயலாளர் ராமு, பாலசுப்பிரமணியன், ஆசிரியர் லட்சுமி, அழகப்பன், கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karaikudi ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...