×

தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க கோரி மனு

சிவகங்கை, நவ. 26: பட்டியல் சாதி பிரிவிலுள்ள ஏழு உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவிலுள்ள தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி உட்பட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து இரண்டு முறை ஆய்வு செய்ய குழு அமைத்தும் எந்த முடிவும் எட்டப்படாமல் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கருப்பு மேலாடை அணிவது என தீர்மானிக்கப்பட்டு அதன்படி கருப்பு நிற மேலாடை கடந்த 10 நாட்களாக அணிந்து வருகிறோம். எங்களின் உணர்வுகளை புரிந்து மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி சிறிதுநேரம் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Devendra ,clan leader ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்