×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், நவ. 26: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவீன ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின் போது, பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் அளிக்க நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதே போல், தினமும் ஏராளமானோர் அன்றாட அலுவல் பணிகள் காரணமாகவும் வந்து செல்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறிப்பிடும்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் இல்லாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் இருந்தாலும் அவைகள் சரிவர பராமரிக்கப்படாமல் அசுத்தமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அலுவலக வளாக பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு சுகாதார வளாகம் கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Integrated Health Campus ,Office ,Karur Collector ,public ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...