×

தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரி தரையில் நெற்கதிர் அடித்து போராட்டம்

திண்டுக்கல், நவ. 26: தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் நெற்கதிர் அடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் நீண்ட ஆண்டுகாலமாக குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தான், வாதிரியான் ஆகிய 7 சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அரசாணை வெளியிட கோரி போராடி வருகின்றனர். மேலும் இந்த பிரிவை பட்டியல் இனத்திலிருந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து 2 முறை ஆய்வு செய்ய குழு அமைத்தும் எந்த முடிவும் எடப்படவில்லை.இந்நிலையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு சட்டை அணிந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெண்கள் தரையில் நெற்கதிர் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேசியதை தொடர்ந்து அனைவரும் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags : Devendra ,ground ,government ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்