×

ஆத்தூர் காவல் நிலையம் முன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

ஆத்தூர், நவ.26: ஆத்தூர் காவல் நிலையம் முன் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சேலம் வாலிபருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சேலம் குரங்குச்சாவடியைச் சேர்ந்தவர் தங்கராசு(29). இவருக்கும், ஆத்தூர் முள்ளுவாடியைச் சேர்ந்த ஜமுனாராணி(27) என்பவருக்கும், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம், தங்கராசு தனது தாயாரிடம், மனைவி மற்றும் மகன்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி விட்டு ஆத்தூருக்கு வந்துள்ளார். மனைவி மற்றும் மகன்களை பார்த்துவிட்டு, நேற்று மாலை சேலத்திற்கு புறப்பட்டுள்ளார். வழியில் ஆத்தூர் நகர காவல் நிலையம் முன் வந்தவுடன், கையில் வைத்திருந்த கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு காவல்நிலையத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து தங்கராசுவை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக காவல் நிலையம் முன் கழுத்தை அறுத்துக் கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘மனநிலை சரியில்லாமல் இருந்து வந்த தங்கராசு, மனைவி மற்றும் குழந்தைகள் தன்னுடன் வராத விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்,’ என்றனர்

Tags : suicide ,police station ,Athurur ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை