×

கரும்பு விவசாயம் பாதிப்பு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

சேலம், நவ.26: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஓமலூர் அடுத்த தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அப்பகுதியில் உள்ள குப்புசாமி என்பவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவருக்கு பாத்தியப்பட்ட வழிப்பாதையை பயன்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர், வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பயிரிட்ட கரும்பை அறுவடை செய்வதுடன், வெளியே கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என தெரிவித்திருந்தனர். இதேபோல், கெங்கவல்லி அடுத்த ஆணையாம்பட்டி எம்ஜிஆர் நகர் காலனியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் அளித்த மனுவில், ஆணையாம்பட்டியில் பொதுத்தேவைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனை அகற்றி, விளையாட்டு மைதானம், சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...