×

கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் ஒத்திகை பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.26: கிருஷ்ணகிரி  கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில்  மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது. கிருஷ்ணகிரி  கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர்  காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, மாவட்ட  வருவாய் அலுவலர் சாந்தி முன்னிலையில் நேற்று நடந்தது. தீயணைப்புத்துறை உதவி மாவட்ட  அலுவலர் ராமச்சந்திரன், தீயணைப்பு அலுவலர் மாது மற்றும் தீயணைப்பு மீட்பு  பணிகள் துறை பணியாளர்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது,  பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் செய்ய ஏணி பயிற்சி, புயல், மழை காலங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் காலங்களில் போர்க்கால அடிப்படையில் நவீன  இயந்திரங்களை கொண்டு மரங்களை அப்புறப்படுத்துவது.

இரும்பு தூண்கள் போன்ற  கான்கிரீட் இடர்பாடுகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வது. எண்ணெயால் ஏற்படும் தீ விபத்து  மற்றும் தீ விபத்து காலங்களில் தீயணைப்பு குறித்த விளக்கம், இடிபாடுகளில்  சிக்குபவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முன் முதலுதவி  செய்தல் போன்ற விளக்கங்களை தீயணைப்புத்துறை அலுவலர்கள் செய்து  காண்பித்தனர். இந்நிகழ்ச்சியை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)  ராமமூர்த்தி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சத்யா, பிஆர்ஓ சேகர் மற்றும்  கலெக்டர் அலுவலக பணியாளர்கள் பங்கேற்று, பார்வையிட்டனர்.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்