வி.கே.புரம், புளியங்குடியில் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்

வி.கே.புரம், நவ. 20: வி.கே.புரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கானகத்துமீரான் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் வி.கே.புரம் நகராட்சி 15வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை நிறுத்துவது, 7, 13 மற்றும் 16வது வார்டுகளை கேட்டுப் பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தேசிய தலைவர் காதர்மொய்தீன் துணைவியார் லத்திபாபேகம், பாத்திமா நகர் உறுப்பினர் அப்துல்ரகுமான் ஆகியோர் மறைவுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. நகர செயலாளர் ரசூல்முகமது நன்றி கூறினார்.   

இதேபோல் புளியங்குடியில் நடந்த கூட்டத்திற்கு நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் காஜாமுகைதீன், மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி உதவி தலைவர் முகம்மது பாவா, கமிட்டி உறுப்பினர் சேக்முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஹபிபுல்லா வரவேற்றார்.கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கும் மற்றும் 11, 12, 13, 14, 16, 20, 26 ஆகிய 7 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டது. முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் லத்தீபா பேகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து துஆ ஓதப்பட்டது. நகர பொருளாளர் முகம்மது சுலைமான் நன்றி கூறினார்.

Related Stories:

>