×

வள்ளியூர் எம்.எஸ் ஜூவல்லரி உரிமையாளர் இல்ல திருமணம்

வள்ளியூர், நவ. 26: வள்ளியூரில் எம்.எஸ் ஜூவல்லரி உரிமையாளர் அசன் மைதீன் இல்ல திருமண விழா விமரிசையாக நடந்தது. வள்ளியூர் அடுத்த துலுக்கர்பட்டி அசன் மைதீன்- நசிரா அசன் தம்பதியினரின் மகன் பாசித் இப்ராஹிமுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியூர்ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ஷேக்- சூரத்நிஸா தம்பதியினரின் மகள் நபினா பாத்திமாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வள்ளியூரில் உள்ள எம்.எஸ். மஹாலில் நடந்தது. ஞானதிரவிம் எம்.பி., நெல்லை கிழக்கு
மாவட்ட திமுக அவைத்தலைவர் அப்பாவு, வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் பெல், மாவட்ட துணைச்செயலாளர் சித்திக், ராதாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், மாநில பொதுக்குழுஉறுப்பினர் ஜோசப் பெல்சி, ஆச்சியூர் முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, மாவட்டப் பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள்,  நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை ஆனைகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், எம்.எஸ். ஜூவல்லரி வள்ளியூர் காவல்கிணறு, எம்.எஸ்  மஹால் உரிமையாளருமான அசன் மைதீன் குடும்பத்தினரும், வள்ளியூர் ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளரும், அரசு ஒப்பந்தக்காரருமான ஷேக் குடும்பத்தினரும் செய்திருந்தனர்.

Tags : Valliyoor ,
× RELATED நெல்லை, தென்காசி, வள்ளியூர்...