×

நெல்லை டயோசீசன் டெப்போவில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை

கேடிசி நகர், நவ. 26:  நெல்லை திருமண்டல டயோசீசன் புக் டெப்போவில் கிறிஸ்துமஸ் கால சிறப்பு விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. பொறுப்பு தலைவர் ஏ.எச்.எல். பில்லி தலைமை வகித்தார். லே செயலாளர் வேதநாயகம் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார், குடில்கள், அலங்கார மின் விளக்குகள், பொருட்கள் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முதல் விற்பனையை திருமண்டல பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ் பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக கல்வி நிலவரக்குழு செயலாளர் செல்வராஜ், திருமண்டல வழக்கறிஞர் ஆன்ட்ரூஸ் சாம்ராஜ், சாராள்தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன்பால்ராஜ், காதுகேளாதோர் பள்ளி தாளாளர் அருள்சாமுவேல், சபை மன்ற தலைவர்கள் வசந்தகுமார், ஏசா சந்திரகுமார், சற்குணம், வில்சன் சாலமோன்ராஜ், ஜெபக்குமார், முத்துராஜ், பால்யநேசன் செயலாளர் டேவிட்அன்பு பிரபாகர், டயோசீசன் கவுன்சில் உறுப்பினர்கள் ஜெபஸ்டின்ராஜன், நடராஜன், தேவதாஸ், பி.எட். கல்லூரி தாளாளர் வக்கீல் காமராஜ், சாராள்தக்கர் ஆசிரியர் பயிற்சி பள்ளி தாளாளர் சுலேக்சுனா ரெஜினால்ட் மற்றும் டியூக் துரைராஜ், அன்பு, ஜான்ஸ் பள்ளி முதல்வர் சாத்ராக், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் விஜயகுமார், எஸ்.எம்.பாண்டியன், ஐன்ஸ்டீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் டயோசீசன் டெப்போ கண்காணிப்பாளர் மணக்காடு ஜீவகுமார் வரவேற்றார். மேலாளர் மோகன்ராஜ், கணக்கர் ஜெபர்சன் ஆகியோர் நன்றி கூறினர்.




Tags : Christmas Special Sale ,Paddy Diocesan Depot ,
× RELATED சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி 95.85% தேர்ச்சி