புளியங்குடியில் 2 வீடுகளில் திருட்டு

புளியங்குடி,நவ. 26: புளியங்குடியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.புளியங்குடி வல்லபவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் காளையா பாண்டியன் (35). வாடகை வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இரண்டு சிறிய வீடுகள் உள்ளது. தற்போது இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் தனது பழைய வீட்டில் பொருட்களை பூட்டி விட்டு புதிய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். நள்ளிரவில் வீட்டுக்கு உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் செல்போன், இரண்டு உண்டியலை எடுத்து சென்று விட்டனர். திருட்டு போன நகை, பணத்தின் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ஆகும். சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி(50). இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவரது வீடு மழை பெய்து ஒழுகுவதால் நேற்று முன்தினம் இரவு அடுத்த தெருவில் இருக்கும் தனது மகள் மாரியம்மாள் வீட்டில்  தங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே புகுந்த நபர் அலமாரியில் உள்ள 10 சேலைகளையும் மற்றும் ஆயிரம் ரூபாயையும் எடுத்து சென்று விட்டனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>