×

குருவிகுளம் அருகே உள்ள கற்படம் கிராமத்தை நெல்லை மாவட்டத்தில் இணைக்க வேண்டும்

நெல்லை, நவ.26: குருவிகுளம் அருகேயுள்ள கற்படம் கிராமத்தை நெல்லை மாவட்டத்தில் இணைக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று திரண்டு வந்து மனு அளித்தனர்.மனு விவரம்: குருவிகுளம் தாலுகா கே.கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் ஊரில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. மேற்படிப்புக்கு எங்கள் கிராம மாணவர்கள் நெல்லை, பாளைக்கே செல்கின்றனர்.  எங்கள் ேதாட்டத்தில் விளையும் காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் நெல்லை சந்தைக்கே வருகின்றன.

தற்போது எல்கை பிரிப்பில் எங்கள் கிராமம் கற்படம், தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்திற்கான வயற்காடுகள் எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இதனால் ஏற்கனவே நாங்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறோம். இப்போது எங்கள் கிராமத்தை தென்காசி மாவட்டத்தில் இணைத்துள்ளதால் மேலும் சிக்கல்கள் எழும். எங்கள் ஊருக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளப்பனேரி கிராம பஞ்சாயத்தில் எங்களை இணைத்து, நெல்லை மாவட்டத்தோடு எங்களை இணைக்க வேண்டும். இப்போதுள்ள கே.கரிசல்குளம் பஞ்சாயத்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஊர் மக்களின் நிர்வாக வசதி கருதி எங்களை நெல்லை மாவட்டத்தில் இணைத்திட கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : village ,Kalpadam ,paddy district ,Kuruvikulam ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...