×

ஏடிஎஸ்பி பேச்சு எந்த பலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்பவர்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர்

திருவண்ணாமலை, நவ.26: எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கடந்த 19 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது சேவை செய்து வருபவர்கள் போலீஸ் நண்பர்கள் குழுவினர் என்று ஏடிஎஸ்பி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு சார்பில் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.நரசிம்மன் முன்னிலை வகித்தார். ஏடிஎஸ்பி கோ.வனிதா கலந்து கொண்டு போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு சீருடைகள் வழங்கி பேசியதாவது:

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்துபோவார்கள். அவர்கள் சிரமமின்றி செல்வதற்கு போக்குவரத்து சரி செய்யும் பாதுகாப்பு பணியை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு பணியை மிக சிறப்பாக செய்து காவல் துறையிடமும், பொது மக்களிடமும் பாராட்டு பெரும் வண்ணம் செயல்பட வேண்டும். மேலும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடந்த 19 வருடங்களாக கார்த்திகை தீபத்திருவிழாவில் மிகச்சிறப்பாக காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறீர்கள். அதனால்தான் மக்கள் மத்தியில் நீங்கள் நிஜ ஹீரோவாக உள்ளீர்கள். உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு நிர்வாகிகள் எஸ்.ரவி, ஆசிரியர் சாமிக்கண்ணு, பேராசிரியர் எம்.பன்னீர்செல்வம், ஜி.பிரவீன்குமார், டி.பிரியன், எஸ்.அஜீத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : police friends ,group ,ATSP ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.