×

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத அல்லாபாத் ஏரி

காஞ்சிபுரம், நவ, 26: சின்னகாஞ்சிபுரம் பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள அல்லாபாத் ஏரியை, பல ஆண்டுகளாக தூர்வாரி, சீரமைக்காமல் உள்ளது. இதனால், ஏரியை சுற்றி வேலிகாத்தான் செடிகள் வளர்ந்துள்ளன. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்றிப்புற மக்களுக்கு பல்வேறு நோய்களை பரப்பி வருகின்றன. தண்ணீர் தேங்க வழியில்லாமலும், நிலத்தடி நீரும் பாதிப்படையும் செடி, கொடிகளை அகற்றி ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என  விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அல்லாபாத் ஏரி அப்பகுதி மக்களுக்கு குடி நீர் ஆராதத்துக்கும் எஞ்சியுள்ள விவசாய நிலத்துக்கும் பல ஆண்டுகளாக குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

கடந்த முறை பெய்த மழையின் போது ஏரி சிறிதளவு நிரம்பியது. தற்போது பெய்த மழையிலும் ஏரியில் ஓரளவுக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. ஆனால் அந்த நீரும் ஏரி சரியாக தூர்வாரப்படாததால் நிரம்பிய நீரும் வெளியேறி வீணாகி கொண்டிருக்கிறது.
ஏரியை சுற்றிலும் வேலி காத்தான் முட் செடிகள் காடு போல் மண்டி காணப்படுகிறது. ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த ஏரியையும் ஒருசிலர் ஒருபகுதியை ஆக்கிரமித்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதியும் பகுதி மக்களின் குடிநீர் தேவையைும் கருத்தில் கொண்டு உடனடியாக அலாபாத் ஏரியில் உள்ள முட்செடிகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Allahabad Lake ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...