×

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

அவிநாசி,நவ.26: அவிநாசி அருகே தண்ணீர்பந்தல்பாளையத்தில் கைத்தறி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது, அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.அவிநாசி வட்டாரத்தில் விசைத்தறிகளில் கைத்தறிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை உற்பத்திசெய்வதாக, திருப்பூர் மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அலுவலகத்துக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் கைத்தறி ரக உதவி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சங்கர்ராஜ் தலைமையில், ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை உதவியாளர் கண்ணன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் குழுவினருடன்    அவிநாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல்பாளையம்  பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இதில், உப்பிலிபாளையத்தை சேர்ந்த மனோகரன்(59). என்பவரது விசைத்தறி கூடத்தில் உள்ள விசைத்தறிகளில்,  கைத்தறி ரகத்திற்கு உட்பட்ட காட்டன் கலப்பு கலர் சேலையை உற்பத்தி செய்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து மனோகரன் மீது கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : manufacturer ,
× RELATED சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை...