×

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி பிரண்ட்லைன் பள்ளி சாம்பியன்

திருப்பூர், நவ.26:திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) சார்பில், 26ம் ஆண்டு மாவட்ட அளவில், மாணவ, மாணவியருக்கான, நிட்-சிட்டி வாலிபால் போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 24 பள்ளிகளைச் சேர்ந்த 48 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. மாணவர், சீனியர் பிரிவில், திருப்பூர் வித்யவிகாசினி பள்ளி முதலிடம், பிரண்ட்லைன் பள்ளி இரண்டாமிடம், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம், வேலன் பள்ளி நான்காமிடம் பிடித்தன. சூப்பர் சீனியர் பிரிவில், பிரண்ட்லைன் பள்ளி முதலிடம், ஏ.வி.பி.பள்ளி இண்டாமிடம், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம், வேலவன் பள்ளி நான்காமிடம் பிடித்தன. மாணவியர் சீனியர் பிரிவில், வித்யவிகாசினி பள்ளி அணி முதலிடம், மைக்ரோ கிட்ஸ் பள்ளி இரண்டாமிடம், ஏ.வி.பி. பள்ளி மூன்றாமிடம், வேலவன் பள்ளி நான்காமிடம் பிடித்தன. சூப்பர் சீனியர் பிரிவில், வித்யவிகாசினி பள்ளி முதலிடம், மைக்ரோ கிட்ஸ் பள்ளி இரண்டாமிடம், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மூன்றாமிடம், ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி நான்காமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு, திருப்பூர் உதவி கமிஷனர் வெற்றி வேந்தன், தமிழ்நாடு மாநில வாலிபால் கழக துணை சேர்மன் ரங்கசாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் சாமுவேல் ராஜா டேனியல், கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

Tags : volleyball tournament frontline school champion ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது