×

விநாயகா மிஷன் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

ஈரோடு, நவ.26: இந்தியாவிலேயே முதன் முறையாக விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு தர நிலை மேலாண்மை ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டது.விநாயகா மிஷனின் சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளுக்கு, ஐஎஸ்ஓ  2001-2018 தர நிலை மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி துறை டீன் செந்தில்குமார் கூறியதாவது:இந்தியாவின் தரக்கட்டுப்பாடு அமைப்பால் (ஓசிஐ) அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் Tuv, sud அமைப்பானது கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆராய்ந்து அவற்றிக்கான தரச்சான்றிதழை வழங்குகிறது. இதன் மூலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் சிறந்த கட்டமைப்பு, செயல் முறைகள், செயல் திட்டங்கள், பாடப்பிரிவுகள், பயிற்றுவிக்கும் முறை மற்றும் மாணவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வழிமுறை போன்றவற்றை ஆராய்ந்து சர்வதேச தர மேலாண்மை (ஐஎஸ்ஓ) சான்றிதழை வழங்கி உள்ளது. இத்தரச்சான்று பெற்றதன் மூலம், வருங்கால குறிக்கோளை நோக்கி கல்லூரியின் செயல்பாடு மேலும் வளரும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vinayaka Mission College ,
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி