×

7வது ஊதியக்குழுவில் அறிவித்த 21 மாத நிலுவைத்தொகை உடன் வழங்க வேண்டும் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் வலியுறுத்தல்

திருவாரூர், நவ. 26: 7 வது உதியக்குழுவில் அறிவித்தபடி 21 மாத ஊதிய நிலுவை தொகைகளை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 7 வது மாவட்ட பேரவை கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜமாணிக்கம் பேரவை கூட்டத்தை துவக்கி வைத்தார். இதில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சவுந்தர் ராஜன், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாதத்தை பணிக்காலமாக கருதி வரன்முறை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், 7 வது ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்க மாவட்ட செயலாளர் பொன்முடி வரவேற்றார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் குமரவேலு நன்றி கூறினார்.

Tags : Highway Roadway Employers ,7th Pay Committee ,
× RELATED 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2009ம்...