×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, நவ.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்கி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2019-20-ம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை உள்ளாட்சி அமைப்பு வாரியாக போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிர் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : wheelers ,district ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்