×

மருத்துவராகும் கனவு பாழானதால் விரக்தி; நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: அரியலூர் அருகே சோகம்..!

அரியலூர்: அரியலூர் அருகே நீட் தேர்வு கடினமாக இருந்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள்.  இரண்டாவது மகள் கனிமொழி(17). இவருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர் ஆக வேண்டும் என ஆசை. ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளியில் படித்த கனிமொழி, 10ம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த அவர், 12ம் வகுப்பில் 562.28  மதிப்பெண் (93 சதவீதம்) பெற்றார். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிப்பேன் என்று பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் கனிமொழி தஞ்சையில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு சென்று தேர்வெழுதினார்.  தேர்வு முடிந்து வெளியே வந்த கனிமொழி தன் ெபற்ேறாருடன் பஸ்சில் ஜெயங்கொண்டம் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் தந்தையிடம், தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. இதனால் நிறைய கேள்விகளுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை என சோகமாக கூறியபடி வந்துள்ளார். அவரை ஆறுதல்படுத்தியபடி தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று முழுவதும் கனிமொழி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையே கனிமொழியின் தாய் ஜெயலட்சுமி நேற்று மாலை 6 மணியளவில் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபம் கிராமத்தில் உளள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் 8 மணியளவில் ஜெயலட்சுமியை கருணாநிதி அழைத்து வர சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கனிமொழி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், கனிமொழி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கனிமொழியின் உடல் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் விக்கிரமங்கலம் போலீசார் இன்று காலை சாத்தம்பா சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு அச்சத்தில் சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது அரியலூர் மாணவி நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post மருத்துவராகும் கனவு பாழானதால் விரக்தி; நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: அரியலூர் அருகே சோகம்..! appeared first on Dinakaran.

Tags : NEET ,ARIALUR ,Ariyalur ,Ariyalur District ,Jayangondam ,
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு