உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடி மத்திய மாவட்ட மநீம நிர்வாகிகள் ஆலோசனை

நெல்லை, நவ. 22: உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் வெற்றிக்கான வழிமுறைகள் வியூகம் வகுத்து வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். தென்மண்டல செயலாளர் பொன்குமரன் முன்னிலை வகித்தார். இதில் ஜவகர், ரத்தினராஜா, ரங்கநாதன், வக்கீல் மங்கள்ராஜ், பிரகாஷ், பாலா, அக்பர், முருகன், மணிகண்டன் மற்றும் மாவட்டப் பேச்சாளர் சண்முகசுந்தரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றடனர்.

Related Stories:

>