×

குறைமாத குழந்தைகளுக்கு ஒரு மாதத்தில் விழித்திரை பரிசோதனை மதுரை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

மதுரை, நவ.22: ‘குறைமாத குழந்தை பிறந்தால், மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டு, ஒரு மாதத்திற்குள் விழித்திரை பாதிப்பு பரிசோதனை நடத்தி, குழந்தையின் பார்வையை காப்பாற்ற வேண்டியது பெற்றோர் கடமை’’ என்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிம் தெரிவித்தார்.
 மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘உலக குறைமாத குழந்தைகள் தினத்தையொட்டி, கண் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மருத்துவமனைக்குள் விழிப்புணர்வு கண்காட்சி நடந்து வருகிறது. நம் நாட்டில் 3.5 மில்லியன் குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன.  இக்குழந்தைகளுக்கு முறையான கண் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், 38சதவீத குழந்தைகளுக்கு விழித்திரை குறைபாட்டினால், பார்வை இழப்பு ஏற்படும். குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் இக்குறைபாட்டை கண்டறிந்து, தேவையான சிகிச்சை கட்டாயம் அளிக்க வேண்டும். இந்த குறைபாட்டிற்கு சிகிச்சை வழங்க, பயிற்சி பெற்ற போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லை என்பதே உண்மை.
ஏடிபி-ஆர்ஓபி என்ற டெலி ஸ்கிரீனிங் திட்டம் மூலம் ஆயிரத்து 629 குழந்தைகளை பரிசோதித்துள்ளோம். இதில் கண்டறிந்த குழந்தைகளில் 29 குழந்தைகளுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி, பார்வையிழப்பை  தடுத்துள்ளோம். குறைமாதத்தில் குழந்தை பிறந்து விட்டாலே, மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டு, விழித்திரை பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை’’ என்றார். டாக்டர்கள் பிராணா ஷோகா, ரேணுராஜன், பிஆர்ஓ ராமநாதன் உடனிருந்தனர்.

Tags : Madhya Pradesh ,medical officer ,examination ,infants ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?