×

நீர்நிலையில் விதிமுறைகளுக்கு முரணாக செம்மஞ்சேரி காவல்நிலையம் கட்டியதை எதிர்த்து வழக்கு

சென்னை, நவ. 22: செம்மஞ்சேரியில் நீர்நிலையில் காவல்நிலையம் கட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையாகும். ஆனால், இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டியுள்ளனர். இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை.எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல்நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ராமலிங்கம் ஆஜராகி, நீர் ஆதாரமாக விளங்கும் இடத்தில் காவல்நிலையத்தை கட்டியுள்ளனர்.

எனவே, இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் செம்மஞ்சேரி காவல்நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரரின் மனுவுக்கு பதில் அளித்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் நீர்நிலை பகுதி என்பதில் இருந்து இதர பணிகளுக்கான மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே, காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள பகுதியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், நீர் வளத்துறை தலைமை பொறியாளர், சிஎம்டிஏ தலைமை திட்ட அதிகாரி ஆகியோர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜசேகரன் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்து, அந்த கட்டிடம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித் துறை, செம்மஞ்சேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடுகிறோம். வழக்கு டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது  என்று உத்தரவிட்டனர்.

Tags : police station ,Chemmanjeri ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்