×

பட்டாசு விற்பனை பாதியாக குறைந்தது சிந்தாமணி கூட்டுறவு அதிகாரிகள் அதிர்ச்சி

ஈரோடு, நவ.22: ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையில் இந்தாண்டு ரூ.64 லட்சத்திற்கு மட்டுமே பட்டாசு விற்பனை நடந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு நிறுவனமான சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை அதன் கிளைகள் மூலம் பல ஆண்டுகளாக பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு மேல் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு வெறும் ரூ.64 லட்சத்திற்கு மட்டுமே பட்டாசு விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் பாதிக்கும் குறைவாகவே இந்தாண்டு விற்பனையானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,`சிந்தாமணி கிளைகளில் பட்டாசுகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. விற்பனை தொகை மூலம் கிடைக்கும் லாபம் பண்டக சாலை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. கடந்தாண்டு ரூ.1.25 கோடிக்கு விற்பனையானதால் நடப்பாண்டிலும் அதே அளவுக்கு பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ரூ.64 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது. கடந்தாண்டு அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாதியாக சரிந்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்றனர்.

Tags : co-operatives ,Chintamani ,
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்