கொல்லூர், கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: ஐஆர்சிடிசி தகவல்

சென்னை: மூகாம்பிகை மற்றும் கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்களை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) கொல்லூர் மூகாம்பிகை கோயில் மற்றும் கோவாவுக்கு 5 நாட்களுக்கான சிறப்பு சுற்றுலா ரயில்களை அறிவித்துள்ளது. இவை மதுரையில் இருந்து அடுத்த மாதம் 5ம் தேதி புறப்படும். கொல்லூர் மூகாம்பிகை ஆலய தரிசன யாத்திரைக்கு 6,930 கட்டணம். இதுபோல் கோவா சுற்றுலாவுக்கு ₹4,725 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

Related Stories:

>