×

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை குழுவினர் தேர்வு

புதுச்சேரி, நவ. 20:  புதுவை ஜீவானந்தம் அரசு மேனிலை பள்ளியில் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
‘நிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற முதன்மை தலைப்பில், நிலையான விவசாய செயல்முறைகள், சுகாதாரமும் உடல்நலமும், வள மேலாண்மை, தொழில் துறை வளர்ச்சி, வருங்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்விசார் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள் போன்ற துணை தலைப்புகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் 349 அறிவியல் படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சிறந்த படைப்புகளை மதிப்பீட்டுக்குழுவானது, மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்தது. கடந்த 2 நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 8400 மாணவர்கள், 320 ஆசிரியர்களும் இக்கண்காட்சியினை பார்வை யிட்டனர்.21, 22 தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளிலிருந்து மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த அறிவியல் படைப்புகள் இடம்பெறுகின்றன. மேலும், கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் மாலை 4மணி முதல் 5 மணி வரை பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

Tags : crew ,Science Fair ,
× RELATED ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு?