×

26, 27ம் தேதிகளில் நடக்கிறது கார் டயர் வெடித்து பைக்குகள் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்

பாடாலூர், நவ. 20: பாடாலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்து 2 பைக்குகள் மீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (35). திருச்சியில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. அப்போதுஎதிரே பெரம்பலூரில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்த வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் சாலையை சேர்ந்த சின்ராசு (28), பாடாலூரை சேர்ந்த சீனிவாசன் (57) ஆகியோரும், மற்றொரு பைக்கில் கூத்தனூரை சேர்ந்த மணிகண்டன் (29), அவரது மனைவி கீதா (25) ஆகிய இருவரும் பெரம்பலூர் சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.அப்போது டயர் வெடித்த கார், 2 பைக்குகளின் மீது மோதியது. இந்த விபத்தில் சின்ராசு, சீனிவாசன், மணிகண்டன், கீதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 4 பேரையும் மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : car tire crashes ,
× RELATED காரைக்காலில் பைக்குகள் திருடிய...