×

டிஎன்பிஎல் சார்பில் நடந்த இலவச பயிற்சியில் பங்கேற்ற 35 பேருக்கு தேனீ பெட்டி வழங்கல்

க.பரமத்தி, நவ. 20: டிஎன்பிஎல் சார்பில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்ற 35 பேருக்கு தேனீக்களுடன் கூடிய தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டது.கரூர் ஒன்றியம் காகிதபுரம் பேரூராட்சியில் இயங்கி வரும் டிஎன்பிஎல் நிறுவனம் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றாக ஆலையை சுற்றி உள்ள காகிதபுரம், புஞ்சைபுகழூர், புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைபுகழூர் ஆகிய ஊராட்சி பகுதி கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்காக கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக மதுரை கதர் கிராம தொழில்கள் ஆணையத்துடன் இணைந்து இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

டிஎன்பிஎல் குடியிருப்பு வளாக மனிதவள அரங்கில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் 35 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியினை கதர் கிராம தொழில்கள் ஆணைய அலுவலர் ஜெயராஜாகுமாரதாஸ் வழங்கினார். தேனீக்களுடன் கூடிய ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தேனீ பெட்டிக்கு காகித ஆலை ரூ.ஆயிரத்து 500 வழங்கியது.பயிற்சியின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் காகித நிறுவன செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமை வகித்து தேனீக்களுடன் கூடிய பெட்டிகளை வழங்கினார். முதன்மை பொது மேலாளர்கள் (மனிதவளம்) பட்டாபிராமன்,(வணிகம்)பாலசுப்பிரமணியன், (உற்பத்தி)தங்கராஜு, முதன்மை தகவல் அலுவலர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : participants ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...