×

இளம் படைப்பாளர் விருது வழங்க பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி 25ம் தேதி நடைபெறுகிறது

கரூர், நவ. 20: இளம்படைப்பாளர் விருதுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வரும் 25ம் தேதி நடைபெறுகின்றன.பள்ளிக்கல்வித்துறையில், மாணவ, மாணவியர்களின் சிந்தனைத்திறன், நற்பண்புகள், பேச்சாற்றல், எழுத்தாற்றல் கொண்ட புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவ மாணவியருக்கு இளம்படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை நூலகத்தின் உறுப்பினர்களாக்கிடவும், சிந்தனைத்திறன், பேச்சு, எழுத்தாற்றல் ஆகிய படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் பொதுநூலகத் துறையின் மூலம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.கரூர் மாவட்டத்தில் வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், வாசித்தேன், வளர்த்தேன் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், என் எதிர்காலம் என் கையில் என்ற தலைப்பில் கவிதைப்போட்டியும் நடத்தப்பட உள்ளது. கரூர், மண்மங்கலம்,, புகழூர் வட்டத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை.

கடவூர் வட்டத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி வட்டத்தை சார்ந்த பள்ளிகளுக்கு அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்படுகிறது. போட்டிகள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் வரும் 25ம் தேதி அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு பிரிவிலும் ஒரு போட்டிக்கு ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் வீதம் தேர்வு செய்து அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமையாசிரியர் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.வட்ட அளவில் முதல் 2 இடங்களில் வெற்றிபெறுபவர்களை தேர்ந்தெடுத்து வரும் 29ம் தேதி கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட அளவில் போட்டி காலை 10 மணிக்கு நடைபெறும். மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு இளம்படைப்பாளர் விருது நூலகவார நிறைவு விழாவில் வழங்கப்படும்.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் செய்து வருவதாக மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : speech ,poetry competition ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...