×

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

திருச்சி, நவ. 20: திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மொத்த இடத்தையும் ராம்லல்லாவுக்கு கொடுத்ததுடன் அந்த இடத்தில் மத்திய அரசே ராமர் கோயில் கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் கொடுத்து அதில் மசூதி கட்டிக்கொள்ளலாம் என 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், இதை கண்டித்து பாபர் மசூதி இடிப்பு-தொடக்கம் என்ற தலைப்பில் நேற்று காலை திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ராஜா தலைமையில் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, தபெதிக வின்சென்ட் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்ததால் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷம் போட்டனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : authority arrests ,
× RELATED 13 பேர் டிஸ்சார்ஜ்