×

மூணாறில் சட்டகல்வியறிவு சங்கத்தின் திறப்புவிழா

மூணாறு, நவ. 20:மூணாறு அருகே தேவிக்குளத்தில் சட்ட கல்வியறிவு சங்கத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திறப்பு விழாவை தேவிகுளம் துணை நீதிபதியும் மாவட்ட சட்ட சேவையின் செயலாளருமான தினேஷன் எம்.பிள்ளை குத்துவிளக்கு ஏற்றி திறப்புவிழா நடத்தினர். மூணாறு மற்றும் தேவிகுளம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசின் சட்ட திட்டங்களை அறியவும் சட்டங்களை அதன் நுணுக்கங்களையும் இளைய தலைமுறை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் தேவிக்குளத்தில் சட்ட கல்வியறிவு சங்கம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூடுதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், அரங்கேறிய வண்ணம் உள்ளது. மேலும் உறவினர்கள், தெரிந்தவர்கள், ஆசிரியர்கள் மூலமாக ஏரளமான மாணவிகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும், சட்ட நுணுக்கங்களை அறியவும், சட்ட திட்டங்களை வளரும் மாணவ மாணவிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும், சட்ட கல்வியறிவு சங்கம் தேவிக்குளத்தில் துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று தேவிகுளம் ஸ்ரீமூலம் கிளப்பில் வைத்து நடைபெற்ற துவக்க விழாவில் தேவிகுளம் துணை நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், முன்சீப் மாஜிஸ்ட்ரைட் சி.உபைதுல்லா, தேவிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் குமார், அரசு உயர் நிலை பள்ளியின் முதல்வர் ஜேக்கப் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தனர். மேலும் தேவிகுளம் துணை நீதிபதி தினேஷன் எம்.பிள்ளை திறப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவ மாணவிகளுக்கு சட்டதிட்டங்களை குறித்து வகுப்புகள் நடத்தினர். இந்திய சட்ட திட்டங்களை இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கு கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Legal Education Association ,Munnar ,
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை