பள்ளியில் குழந்தைகள் தினவிழா

தேனி, நவ. 20:தேனியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.  தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவிற்கு நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் ராஜமோகன் தலைமை வகித்தார். பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். விழாவின்போது பள்ளி  மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேனி டிகேஎஸ் பள்ளி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர்.

விழாவின்போது, எல்.கே.ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களின் மாறுவேடம், கதை சொல்லுதல், பரதம், குழுநடனம், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி பண்டித ஜவஹர்லால் நேருவின் உருவம் கோலமாக பள்ளி வளாகத்தில் வரையப்பட்டது.

Related Stories:

>