×

மூணாறு அருகே 7 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

மூணாறு, நவ. 20:மூணாறு அருக 7 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது கஞ்சிக்குழி பகுதி. இங்கு கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கஞ்சுக்குழி டவுனில் நேற்று வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது கஞ்சுக்குழி பகுதியைச் சேர்ந்த பினுகுமார், ஜோயி, தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜினு  ஆகியோர் 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதில் பினுகுமார் ஒரிசாவில் 307 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 16 வருடம் சிறைவாசம் அனுபவித்து தற்பொழுது பரோலில் வந்தவர் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய டூவீலரை போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த அதிரடி சோதனையில் சஜிமோன். ஷாஜி, சுங்கத்துறை அதிகாரிகளான ஜலீல், லிஜோ ஜோசப், ரஞ்சித் போன்ற அதிகாரிகள் அடங்கிய குழு இந்த அதிரடி சோதனையில் முக்கிய பங்குவகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,kidnapping ,ganja ,Munnar ,
× RELATED 5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது