×

தேவிகுளம் எம்.எல்.ஏ. வீடு மூணாறில் முற்றுகை

மூணாறு, நவ. 20: கேரள மாநிலம் வாளையார் பகுதியில் சகோதரிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் மவுனம் காட்டுவதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி தேவிகுளம் மண்டல கமிட்டி தலைவர்கள், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி, பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்தத் தம்பதியின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து சிலர் முகமூடி அணிந்து சென்றதாக சிறுமியின் தங்கை போலீசில் கூறினார். போலீசார் இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டு வந்தனர்.

இது நடந்து இரண்டு மாதத்துக்குள் அதாவது 2017, மார்ச் 4ம் தேதி மற்றொரு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு மைனர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவர் செப்டம்பர் 30ம் தேதி விடுவிக்கப்பட்டார். ம.மது, வி.மது மற்றும் ஷிபூ ஆகிய மூவரும் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இடதுசாரிகள் என்பதால் விடுவிக்கப்பட்டனர் எனச் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வளையார் கொலை சம்பவத்தில் தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதில் மவுனம் காட்டி வருவதாக கூறி நேற்று மலை பகுஜன் சமாஜ் கட்சியின்  தேவிக்குளம் மண்டல கமிட்டி தலைவர்கள் ஒரு அணியாக சேர்ந்து எம்எல்ஏ ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து
அனுப்பினர்.

Tags : Devikulam MLA ,house ,
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை