×

மாத்தூர் ஊராட்சியை ஆதிதிராவிடருக்கு ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை, நவ. 20: மாத்தூர் ஊராட்சியை ஆதிதிராவிடர்(பெண்) என ஒதுக்கக் கோரிய மனு தள்ளுபடியானது.  மதுரை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த அய்யாசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பொது தொகுதி என்ற அடிப்படையில் கடந்த 1996ல் தேர்தல் நடந்தது. அதன்பிறகு நடந்த 2001, 2006 மற்றும் 2011லும் பொது தொகுதியாகவே இருந்தது. இங்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த மே மாதம் மாத்தூர் ஊராட்சி ஆதிதிராவிடர் (பெண்) என தனித்தனியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென மீண்டும் பொது தொகுதியாக அறிவித்துள்ளனர். சட்டப்படி 10 ஆண்டுக்கு ஒரு முறை இன சுழற்சி முறைப்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பொது  தொகுதியாகவே நீடிக்கிறது. எனவே, மாத்தூர் ஊராட்சி  தலைவர் பதவியை ஆதிதிராவிடர் (பெண்) என அறிவித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஊராட்சியிலுள்ள மக்கள்தொகை அடிப்படையில் தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போதைய மக்கள் தொகைப்படி மாற்ற வாய்ப்பில்லை. எதிர்வரும் காலத்தில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : residents ,Mathur ,Adivasi ,
× RELATED சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக...