×

கொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், நவ. 20: கொடைக்கானலில் கடந்த பல தினங்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு தாண்டிக்குடி பிரதான சாலையில் கடுகுதடி அருகே திடீரென்று மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் விழுந்தபோது, அதிர்ஷ்டவசமாக சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மலைச்சாலையில் ஆபத்தான வகையில் நிற்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : road ,Kodaikanal ,
× RELATED சாலையில் சாய்ந்த மரம்