×

மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

நத்தம், நவ. 20: மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு நத்தம் மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு அளவிலான விளையாட்டுப் போட்டிளில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அடைக்கன், ஹேமலதா, சௌமியா, விஜய்பிரவின், பவித்ரா, சர்மிளா ஆகியோரை பள்ளியின் தாளாளர் ராமசாமி பதக்கங்கள் வழங்கி பராட்டினார். மேலும் பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகளும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : School ,Athletes Competition for State Athletics Competition ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு